Tuesday, June 29, 2010

அக்காவுடன் பிறந்தவர்கள்...

"அக்காவுடன் பிறந்தவர்கள் அதிஷ்டம் செய்தவர்கள்" என கலாப்ரியா எழுதிப் படித்திருக்கிறேன். உண்மைதான் என நான் தனியே சொல்லத் தேவையில்லை.



என் இசை, வாசிப்பு, எழுத்து சார்ந்த ரசனைகளும் திறன்களும் நான் என் அக்காவிடம் வாங்கிக் கொண்டவைகள்.

நாங்கள் கற்றவைகளும் கற்பித்துக் கொண்டவைகளும் இங்கே "எப்போதும் பெண்'ணில் சுருக்கி வரையயுமளவு சின்ன விஷயங்கள் அல்ல.

அவள் எழுதிய கவிதை ஒன்றை இங்கே வெளியிட்டு என் தளத்தைப் பெருமைப்படுத்திக் கொள்கிறேன்.

பகை நிழல்

இரு தலைமுறைப் பகை
வீட்டுப் பங்காளிகளுடன்.
ஆண்கள் எதிரெதிர் சந்திப்புகளில்
ஒரு முறைப்புக்குப் பின் முகம்
திருப்பிக் கொள்கின்றனர்.
பெண்கள் தலை கவிழ்ந்து
கடந்து செல்கின்றனர்.
குழந்தைகள் யாரும் பார்க்காதபோது
யாருக்கும் புரியாத பார்வைகளை
பரிமாறிக் கொள்கின்றனர்.

பகை....
அறியுமோ அறியாதோ
தன் கிளைக் கைகளில் 
பூக்களையும்
இருப்பதிலே இனிப்பான 
பழங்களையும்
அப்பாவின் சாய்வு நாற்காலிக்கு 
நிழலையும்
மதில் சுவர் தாண்டி நீட்டிக் கொண்டிருக்கிறது
அவன் வீட்டுச் செடிகளும் மரங்களும்.

13 comments:

  1. கவிதை நல்லா இருக்கு பங்காளி

    ReplyDelete
  2. Very good poem, especially the second stanza. It is this that elevates the poem to the higher level.

    ReplyDelete
  3. @ வழிப்போக்கன்

    ரொம்ப நன்றி தலைவரே.

    @ பாலாஜி

    தேங்க்ஸ் சார்.

    ReplyDelete
  4. "....மதில் சுவர் தாண்டி நீட்டிக் கொண்டிருக்கிறது...." மரங்கள் மட்டுமல்ல குழந்தைகளும் பகை அறியா உணர்வுகள் கொண்டவர்கள். கருத்தாளமுள்ள நல்ல பதிவு.

    ReplyDelete
  5. நன்றி முருகானந்தன் ஐயா!

    ReplyDelete
  6. I see !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

    ReplyDelete
  7. நல்ல கருத்துள்ள கவிதை.வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. மிக மிக அருமை .......
    உணர்ந்து எழுதி உள்ளீர்கள்

    ReplyDelete
  9. நீங்கள் அதிர்ஷ்டசாலி. எனக்கு அக்கா இல்லாததை நினைத்து ஒரு காலகட்டத்தில் வருந்தியிருக்கிறேன்.

    ReplyDelete
  10. A Good Poem. Wishes to Ur akka.

    I too have two younger brothers :-)

    ReplyDelete
  11. கவிதை நல்லாருக்கு.. ஆனா நான் தான் ரொம்ப லேட்டு போல..

    ReplyDelete
  12. பகை சுடத்தான் செய்தாலும் பலசமயங்களில் நிழல்தருவதும் உண்மையே.
    பகைஎன்றாலே பொதுவில் ஒரு காலத்துச் சொந்தமே
    இப்படி நீளும் விவரத்தினை உள்ளடக்கிய 'பகையின்நிழல்' தலைப்பினை உள்ளூற ரசித்து வியக்கின்றேன் , செறிவான கவிதையைப் படித்த திருப்தியோடு . .!

    ReplyDelete
  13. நானும் என் தம்பிக்கு ஒரு அக்கா, அதனால் உங்கள் சிலாகிப்பு எனக்குப் பெருமை :-) அருமையான கவிதை! வாழ்க்கையில் உணர்ந்து எழுதப்பட்டக் கவிதை என்று எண்ணத் தோன்றுகிறது.

    amas32

    ReplyDelete